இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image

தங்கம் விலை - ANI

Updated On :10 ஏப்ரல் 2026, 10:07 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,000 வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரன் ரூ. 1,11,920 -க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ரூ. 1,10,880, புதன்கிழமை ரூ. 1,13,600, வியாழக்கிழமை ரூ. 1,12,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 1,000 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,125-க்கும், ஒரு சவரன் ரூ. 1,13,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.

இதேபோல் வெள்ளியில் விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,65,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

Today Gold and Silver Price in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.