பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: 191 ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Service Commission Officers(Tech) Men and Women (April 2021)
காலியிடங்கள்: 191(இதில் 2 இடங்கள் போரில் வீரமணமடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ஐடி, ஏரோனடிக்கல், கணி அறிவியல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் PG Diploma in Defence Management and Stategic Studies எனும் படிப்புக்கு அனுமதிக்கப்படுவர். படிப்பு முடிந்தவுடன் இந்திய ராணுவத்தில் "துணை அதிகாரி"யாக பணி அமர்த்தப்படுவர்.
பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2020
மேலும் கல்வி, துறைவாரியான காலியிடங்கள் பயிற்சி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...