காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் எல்காட் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited(ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Private Secretary, Driver, Attender பணிக்கான அறிவ

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 9:09 am

தினமணி


தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited(ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Private Secretary, Driver, Attender பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Private Secretary

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினி துறையில் ஆபிஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: Driver
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
பணி அனுபவம்: 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 

பணி: Attender 
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்கும் முறை: www.elcot.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்  நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Electronics Corporation of TamilNadu Limited, MHU Complex, II Floor, 692, Anna Salai, Nandanan, Chennai - 600 035

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.09.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.