காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலை... வேலை... வேலை... பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் வேலை

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2020, 9:06 am

தினமணி


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் (ஆண்,பெண்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை

பணி: சமையலர்

காலியிடங்கள்: 226

சம்பளம்: மாதம் ரூ.15,700

பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், ஈரோடு,  திருப்பூர், தூத்துக்குடி

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ள மாவட்டத்தின் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்: 
* கல்வி தகுதி சான்று மற்றும் வயது சான்று
* சாதிச்சான்றிதழ்
* முன்னுரிமை சான்றிதழ்
* ஆதார் அட்டை
* குடும்ப அட்டை, இருப்பிட சான்று
* வேலை வாய்ப்பக பதிவு (இருப்பின்) 
* சமையல் பணியில் முன் அனுபவ சான்றிதழ்

மாவட்ட இணையதள முகவரி: 
https://cuddalore.nic.in
https://thoothukudi.nic.in
https://erode.nic.in
https://trichy.nic.in
https://karur.nic.in
https://Ariyalur.nic.in
https://tiruppur.nic.in
https://vellore.nic.in
https://chennai.nic.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.