ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் வேலை

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களில் புதிதாக பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களில் புதிதாக பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Record Clerk - 37
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Driver - 32 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம். போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 32 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://tncwwb.onlineregistrationform.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBDOC/Notification_RC_Driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com