ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அணுசக்தி கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் கழகத்தில் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
கூடங்குளம் அணு மின் நிலையம்
Updated On :1 ஆகஸ்ட் 2021, 5:18 pm

தினமணி



இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் கழகத்தில் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ படித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NPCIL/KKNPP/HRM/02/2021

பயிற்சி: Trade Apprentices

மொத்த காலியிடங்கள்: 173

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 50
2. Mechinist - 25
3. Welder (Gas & Electric) - 08
4. Electrician - 40
5. Electronic Mechanic - 20
6. Pump Operator Cum Mechanic - 05
7.Instrument Mechanic - 20
8. Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning - 05

தகுதி:   பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.08.2021 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ-இல் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். 

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கூடங்குளம் அணுமின் கழகம்.

பயிற்சி காலம்: 1 ஆண்டு

உதவித்தொகை: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8.,855-ம், ஒரு ஆண்டு  ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.7,700-ம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager(HRM), HR-Recruitment Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam(PO), Radhapuram Taluk, Tirunelveli District, - 627106

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.