அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 50 எஸ்எஸ்சி அதிகாரி (பொது சேவை), ஹைட்ரோகிராபி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 8:54 am

தினமணி


இந்திய கடற்படையில் காலியாக உள்ள 50 எஸ்எஸ்சி அதிகாரி (பொது சேவை), ஹைட்ரோகிராபி தனித்துவமான படிப்புகளுடனான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத தகுதியான பொறியியல் பட்டதாரிஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். 

நிறுவனம்: இந்திய கடற்படை

மொத்த காலியிடங்கள்: 50

பணி : SSC General Service (GS/X) - 47 

பணி : Hydro Cadre  - 03

தகுதி:  பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  

வயது வரம்பு : விண்ணப்பத்தாரர் 02.01.1997 முதல் 01.07.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400 

விண்ணப்பிக்கும் முறை : https://www.joinindiannavy.gov.in/en/event/naseem-al-bahr-2016-visit-of-royal-navy-of-oman-ships.html எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியான விண்ணப்பத்தாரர்களின் மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இரண்டு தனித்துவமான படிப்புகளில் ஒன்றுக்கு தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://www.joinindiannavy.gov.in/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_3_2122b.pdf ZVdJ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.