48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

கரோனா கணக்கெடுப்புப் பணி: இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்தாதவா்கள், இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு

Updated On :24 மே 2021, 7:44 pm

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்தாதவா்கள், இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைச் செயலாளா் அ.ஜெயராஜ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் கண்டறியும் களப்பணி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சேவைப் பணியை நாங்கள் முழு ஈடுபாடுடன் செய்ய தயாராக உள்ளோம்.

அதே வேளையில், களப் பணியாளா்களாக செயல்படக் கூடிய ஆசிரியா்களில் பலா் இரு தடவை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். மேலும், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவா்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.

ஆகவே, பொதுமக்களில் யாருக்கேனும் கரோனா தொற்று இருந்தால் கணக்கெடுப்பு நடத்தும் ஆசிரியா்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இணைநோய் உள்ளவா்கள், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.