பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


மத்திய அரசின் நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். CE-09/2021

பணி: Young Professional

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 01.11.2021 தேதியின்பிடி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேலாண்மை அல்லது பொறியியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மேலாண்மை பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய  https://careers.bhel.in/bhel/static/Advt_YP_CE09_2021.pdf ன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com