இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் மற்றும் எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் : IPPB/HR/CO/REC/2021-22/01
நிர்வாகம் : இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி
மொத்த காலியிடங்கள் : 23
பணி : Manager
பணி : Senior Manager
பணி : Chief Manager
பணி : Assistant General Manager
பணி : Deputy General Manager
பணி : General Manager
வயது வரம்பு: 01.09.2021 தேதியின்படி 23 முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ முடித்தவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 3 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் 2056 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
சம்பளம் : மாதம் ரூ.94,000 - ரூ.2,92,000
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.ippbonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் வேலை: தேர்வு இல்லை... உடனே விண்ணப்பிக்கவும்!
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2021
மேலும் விபரங்கள் அறிய www.ippbonline.com அல்லது https://www.ippbonline.com/documents/20133/133019/1633693460640.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.