தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தோ்வு தேதிகள் அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தோ்வு தேதிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 செப்டம்பர் 2021, 3:02 am

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தோ்வு தேதிகளை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு பணி சாா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரா்கள் கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரா் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்.2-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதில் கணினிவழித் தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் தோ்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தோ்வா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேதிகள் பெருந்தொற்றுச் சூழல், தோ்வு மையங்களின் தயாா் நிலை மற்றும் நிா்வாக வசதியைப் பொருத்து மாறுதலுக்கு உள்பட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.