நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... திருச்சி என்ஐடியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியில் உதவி பேராசிரியர் - 'கிரேடு II' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 9:20 am

தினமணி


  
தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியில் உதவி பேராசிரியர் - 'கிரேடு II' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: NITT/R/F/2021/01 தேதி: 25.08.2021

மொத்த காலியிடங்கள்: 92 

பணி: உதவி பேராசிரியர் - 'கிரேடு II' 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Architecture - 04
2. Chemical Engineering - 02
3. Chemistry - 05
4. Civil Engineering - 13
5. Computer Science & Engineering - 05
6. Computer Applications - 07
7. Electrical & Electronics Engineering - 05
8. Electronics & Communication Engineering - 10
9. Energy & Environment - 03
10. Humanities & Social Sciences - 03
11. Instrumentation & Control Engineering - 04
12. Management Studies - 03
13. Mathematics - 04
14. Mechanical Engineering - 05
15. Metallurgical & Materials Engineering - 08
16. Physics - 02
17. Production Engineering - 09

தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட துறையில் இளங்கலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:  35க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500. பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, NIT, Trichy - 620 015.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.9.2021 மாலை 5:30 மணி.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.10.2021 மாலை 5:30 மணி.

மேலும் விபரங்கள் அறிய https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.1_Short_Notice.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.