இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 174 குரூப் ‘சி’ சிவிலியன் பணியிடங்களான எம்டிஎஸ், தச்சர், சமையல்காரர், பண்டக காப்பாளர் போன்றவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 8:46 am

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 174 குரூப் ‘சி’ சிவிலியன் பணியிடங்களான எம்டிஎஸ், தச்சர், சமையல்காரர், பண்டக காப்பாளர் போன்றவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.04/2021/DR

மொத்த காலியிடங்கள் : 174

நிர்வாகம் : இந்திய விமானப் படை

பணி : குரூப் ‘சி’ சிவிலியன் 

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.29,300 - ரூ.39,800 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய  www.davp.nic.in அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_16_2122b.pdf என்ற லிங்கை கிளிக்  செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.