புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:39 am

தினமணி

சென்னை: வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய தேதிகளில், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி மற்றும் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய 991 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. 

இந்நிலையில், இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இத்தேர்வு எழுதியவர்கள் அதன் முடிவுகளை http://tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/english/Results.aspx  என்ற டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பின்னர், எதிர்கால பயன்பாட்டிற்காக தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.