வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 76 சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!


 
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 76 சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 

மொத்த காலியிடங்கள் : 76 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி : Circle Defence Banking Advisor - 01
சம்பளம்: மாதம் ரூ. 19.50 லட்சம்

பணி : Assistant Manager (Marketing & Communication) - 04
பணி :  Assistant Manager - Engineer (Civil) - 17
பணி :  Assistant Manager - Engineer (Electrical) - 06
சம்பளம்: மாதம் ரூ.36,000 - ரூ.63,840

பணி :  Deputy Manager (Agri Spl) - 10
சம்பளம்: மாதம் ரூ.48,170 - ரூ.69,810

பணி :  Relationship Manager (OMP) - 06
பணி :  Product Manager (OMP) - 02
சம்பளம்: மாதம் ரூ.63,840 - ரூ.78,230

வயது வரம்பு : உதவி மேலாளர் பணிக்கு  குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : Circle Defence Banking Advisor - Major General அல்லது Brigadier ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இணை மேலாளர் பணிக்கு எம்பிஏ அல்லது Rural Management PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant Manager பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல்,  பிரிவில் பி.இ, அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Relationship Manager மற்றும் Product Manager  பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக் முடித்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய கீழ்வரும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com