ஓர் அரிய வாய்ப்பு... என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பயிற்சி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் , தொழில் பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு, பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எம்எல்டி போன்ற  பல்வேறு தொழில் பழகுநர் பயி
ஓர் அரிய வாய்ப்பு... என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பயிற்சி


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் , தொழில் பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு, பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எம்எல்டி போன்ற  பல்வேறு தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC)

பணி : Fitter fresher - 20
பணி : Electrician fresher - 20
பயிற்சி காலம்: 24 மாதங்கள்.

பணி : Welder fresher - 20 
பயிற்சி காலம்: 15 மாதங்கள்.
தகுதி: மேற்கண்ட பயிற்சி இடங்களுக்கு 2019,2020,2021 ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உதவித் தொகை: பயிற்சியின்போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019

பணி : Medical Lab Technician Pathology  - 10 
பணி : Medical Lab Technician Radiology - 05 
பயிற்சி காலம்: 15 மாதங்கள்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்பவராகவும், இதற்கு முன்பு தொழில்பழகுநர் பயிற்சிக்கு செல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:  முதலாம் ஆண்டும் மாதம் ரூ.8,766, அடுத்த மூன்று மாதங்கள் ரூ.10,019 வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.06.2021 தேதியன்று 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா... தமிழக அரசு வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்18.08.2021 தேதி மாலை 5 மணிக்குள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் பதிவு விண்ணப்பத்தில் பதிவு செய்து விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 23.08.2021

அசல் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் www.nlcindia.com என்ற இணையதளத்தில் உத்தேசமாக 28.08.2021 தேதி வெளியிடப்படலாம்.

மேலும் விபரங்கள் அறிய www.nlcindia.com அல்லது https://www.nlcindia.in/new_website/careers/2.FRESHER-NET%20ADVERTISE-2021-22.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com