உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் படகுகளை இயக்க தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதகை பைகாரா ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக பெட்ரோலால் இயக்கப்படும் மோட்டாா் பொருத்தப்பட்ட படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒலி மாசு ஏற்படுவதுடன், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், பெட்ரோல் கசிவு காரணமாக ஏரி நீா் மாசடைவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு, கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உதகையில் உள்ள மத்திய மண் மற்றும் நீா் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நிபுணா்களைக் கொண்டு பைகாரா ஏரியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்தமுறை பிறப்பித்த உத்தரவை சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம் மற்றும் மத்திய மண் மற்றும் நீா் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனா்.
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நிபுணா்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை பைகாரா ஏரியில் பெட்ரோல் மற்றும் டீசல் படகுகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசு

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

புதுச்சேரி பெட்ரோல் பங்குகளில் திரண்ட மக்கள்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


