தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 13th November 2021 02:58 PM | Last Updated : 13th November 2021 02:58 PM | அ+அ அ- |

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், விழுப்புரம் மண்டலத்தில் தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், காவல் பணிக்கு தகுதியான விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ந.க. எண்: இ4/1857/2021 தேதி: 29.10.2021
பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ.2,410 - 4,049(அகவிலைப்படி)
தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பருவ கால காவலர்
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ.2,359 - 4,049(அகவிலைப்படி:
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
படிக்க | ரூ.71 ஆயிரம் சம்பளத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் வேலை
வயதுவரம்பு: பொது பிரிவினர் 32க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் தங்களைப் பற்றி முழு விவரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நம்பர்-1, ஆஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.11.2021
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...