மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு

மத்திய அரசின் பல துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்தந்தப் பணிகளுக்குத் தேவையான தகுதிகளும், சிறப்புத் திறமைகள் இருப்பவர்கள் மட்டுமே எளிதாக அந்தப் பணிகளில் சேர முடியும். 
மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு
Published on
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியன் எக்கனாமிக்ஸ் தர்வீஸ், இந்தியன் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மத்திய அரசின் பல துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்தந்தப் பணிகளுக்குத் தேவையான தகுதிகளும், சிறப்புத் திறமைகள் இருப்பவர்கள் மட்டுமே எளிதாக அந்தப் பணிகளில் சேர முடியும். 

போட்டித் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தங்களது பணிகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

அந்த வகையில் தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியன் எக்கனாமிக்ஸ் தர்வீஸ், இந்தியன் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
மொத்த காலியிடங்கள்: 53

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Indian Statistical Service Examination
காலியிடங்கள்: 29

பணி: Indian Economic Service Examination
காலியிடங்கள்: 24 

தகுதி: பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம், புள்ளியியல், கணிதப் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி, 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  26.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in/mainmenu2.php அல்லது  https://upsconline.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com