விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
Published on
Updated on
1 min read


சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண்.03/2022 தேதி: 08.04.2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Junior Research Fellow 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 31,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி:  Project Associate – I 
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.25,000 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக்., எம்.பார்ம், எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://clri.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம்  செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனுடன் பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளர் உள்ளிட்ட ஏதாவதொரு அடையாள அட்டையுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIRCentral Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.clri.org/docs/2022/news/Notification%20No.03-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com