இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 86
பணி: ஓட்டுநர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: இரவு காவலர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஒட்டத்தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
மாவட்ட வாரியான காலிடங்கள் விவரம்:
சிவகங்கை - 6, திருவண்ணாமலை - 5, வேலூர் - 5, கள்ளக்குறிச்சி - 7, ராமநாதபுரம் - 3, புதுக்கோட்டை-7, மதுரை - 4, திருப்பூர் - 5, ஈரோடு- 5, காஞ்சிபுரம் - 4, சென்னை - 4, நாகப்பட்டினம் - 5, மயிலாடுதுறை - 6, திண்டுக்கல் - 2, திருச்சிராப்பள்ளி - 9, தூத்துக்குடி - 5.
வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது 21, 22, 25, 26, 28,29, 30க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற லிங்கில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி அடுத்த பெரிய முதலியார்சாவடியில் திடீர் கடல் சீற்றம்: இடிந்து விழும் நிலையில் தங்கும் விடுதி

வார பலன்கள் (ஜூலை 17 - 23) 12 ராசிகளுக்கும்! மழலை பாக்கியம் யாருக்கு?
தொடர்ந்து 20 நாள்கள் உண்ணாவிரதம்! ஜூலை 20 வரை என் உயிருக்கு எதுவும் ஆகாது: வாங்சுக்

பழவேற்காடு மீனவா்கள் நாளை(ஜூலை 18) கடலில் மீன் பிடிக்க தடை
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



