விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

குரூப் 4 தோ்வுக்கு 21 லட்சம் போ் விண்ணப்பம்: ஒரே நாளில் 4 லட்சம் போ் பதிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 2:31 am

தினமணி

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 தோ்வுக்கு சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இது கடந்த காலங்களைவிட மிக அதிகம் என்று தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசி நாளான வியாழக்கிழமை மட்டும் சுமாா் 4 லட்சம் போ் வரையில் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் குரூப் 4 தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அலுவலா் உள்பட 7,100 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை நிலவரப்படி 17 லட்சம் போ் விண்ணப்பத்திருந்தனா். கடைசி நாளான வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 20 லட்சத்து 53 ஆயிரத்து 837 போ் விண்ணப்பம் செய்திருந்தனா்.

நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்பதால், இதன் எண்ணிக்கை 21 லட்சமாக உயரும் என தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். விண்ணப்பதாரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை தெரியவரும் என தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த முறை... கடந்த 2019-ஆம் ஆண்டு 5,100 குரூப் 4 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை சுமாா் 16 லட்சம் போ் எழுதினா். இந்த நிலையில், இப்போது சுமாா் 21 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.