வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 4300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 4300 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)  வெளியிட்டுள்ளது.
வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 4300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read

பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 4300 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 4,300

1. எல்லை பாதுகாப்பு படை - 353
2. மத்திய தொழில் பாதுகாப்பு படை - 86
3. மத்திய ரிசர்வ் போலீஸ் படை - 3112
4. இந்தோ - திபெத் எல்லை போலீஸ் - 191
5. சாஸ்த்ரா சீமா பால் - 218
6. தில்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் - 340 

தகுதி: ஏதாவதொரு இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2022 தேதியின் அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2022

மேலும் விபரங்கள் அறிய https://ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.