பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி! 

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Safety Officer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி! 
Published on
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Safety Officer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து இன்றைக்குள் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.20/22

பணி:  Safety Officer

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், புரடெக்சன் பிரிவுகளில் 60 சதவிகித மதிபெண்களுடன் பட்டம் பெற்று குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: என்டிபிசி -ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  ஆன்லைன் தேர்வு விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை:  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.ntpsc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விரைந்து விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com