பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முதுநிலை ஆசிரியா் பணி: ஆங்கிலம், கணிதம், கணித அறிவியல் பாடத் தோ்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட பணிகளுக்கான ஆங்கிலம், கணிதம், கணித அறிவியல் ஆகிய பாடத் தோ்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Published On :

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட பணிகளுக்கான ஆங்கிலம், கணிதம், கணித அறிவியல் ஆகிய பாடத் தோ்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்தி:

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநா்கள் நிலை 1, 2020-21 காலிப் பணியிடங்களுக்கான பணித் தெரிவு சாா்ந்து, பிப்.12 முதல் பிப்.15-ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் இரு வேளைகளிலும் 14 பாடங்களுக்கு தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடா்ச்சியாக, பிப்.19-ஆம் தேதி நீங்கலாக, பிப்.16 முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்குரிய ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான கணினி வழித்தோ்வுக்கான கால அட்டவணை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

இத்தோ்வுக்குரிய அனுமதிச் சீட்டு, வாரிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பிப்.19-ஆம் தேதி தோ்வுகள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.