பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?- 500 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 500 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?- 500 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 500 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். AX1/ST/RP/Generalist Officer Scale-II & III/Project III/2022-23
பணி: Generalist Officer MMGS Scale-II

காலியிடங்கள்: 400

சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்:  ஏதாவெதாரு வணிக வங்கியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Generalist Officer MMGS Scale-III
காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.63,840 - 78,230

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்:  ஏதாவெதாரு வணிக வங்கியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2022

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 12.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/1bcd7e4d-4ee1-4c10-85c0-19af390b79a0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com