எம்எஸ்சி வங்கியில் வேலை வேண்டுமா? - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மகாராஷ்ரம் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள  சிறப்பு அதிகாரி, மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்எஸ்சி வங்கியில் வேலை வேண்டுமா? - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


மகாராஷ்ரம் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள  சிறப்பு அதிகாரி, மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். 2 / MSC Bank / 2021-2022
அறிக்கை எண்.3 / MSC Bank / 2021-22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Treasury Domestic Dealer - 04
பணி: Treasury Forex Dealer (Officer Grade II) - 01
பணி: Treasury Mid Office/ Back Office (Junior Officer) - 03
வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி, 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேணே்டும். 
சம்பளம்: மாதம் ரூ.45,000 வழங்கப்படும்.  

பணி: Manager, Banking - 01
பணி: Manager, DCC Bank Department - 01
பணி: Manager, Urban Bank Department - 01
வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி, 40 முதல் 55 வயதிற்குள் இருக்க வேணே்டும். 
சம்பளம்: மாதம் ரூ.85,000 வழங்கப்படும்.  

தகுதி:  நிதியியல், புள்ளியியல், கணிதவியல் போன்ற துறைகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  மேலாளர் பணிக்கு கூடுதல் தகுதியாக சிஏ மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி: "The Managing Director, The Maharashtra State Co-operative Bank Ltd., Mumbai, Sir Vithaldas Thackersey Smurti Bhavan, 9, Maharashtra Chamber of Commerce Lane, Fort, Mumbai – 400 001, Post Box No-472."


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
31.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.mscbank.com/Documents/Careers/Treasury%20Advertisement%202022.pdf மற்றும் https://www.mscbank.com/Documents/Careers/Manager%20Recruitment%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com