இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: இரு பாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவத்தில் என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் காலியாக 55 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: இரு பாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

  
இந்திய ராணுவத்தில் என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் காலியாக 55 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. NCC Men - 50 
2. NCC Women - 05

தகுதி: குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி பிரிவில் குறைந்தது இரண்டாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2022 தேதியின்படி, 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022  

மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTFN_FOR_NCC_SPL_ENTRY_52_COURSE-_OCT_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com