வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய தர நிர்ணய மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
By | Published On : 30th April 2022 01:35 PM | Last Updated : 30th April 2022 01:40 PM | அ+அ அ- |

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின்கீழ் செயல்பட்டும் வரும் இந்திய தர நிர்ணய மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் மே 9 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02/2022/ESTT
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Director (Hindi)
காலியிடங்கள்: 01
பணி: Assistant Director (Administration & Finance) – For Administration
காலியிடங்கள்: 01
பணி: Assistant Director (Marketing & Consumer Affairs)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,17,500
பணி: Personal Assistant
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பயன்படுத்துவதில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், அதனை 45 நிமிடத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Section Officer
காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant(CAD)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி படிப்புடன் ஆட்டோகேட் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், அதனை 50 நிமிடத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Secretariat Assistant
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: இளநிலைப் பட்டத்துடன் கணினியில் 15 நிமிடத்தில் 2 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Horticulture Supervisor
காலியிடங்கள்: 01
தம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தோட்டக்கலைத் துறை சார்ந்த பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant(LAB)
காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், மைக்ரோபயலஜி போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Senior Technician
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர், வெல்டர், டர்னர், எலக்ட்ரீசியன், கார்பன்டர், பிட்டர் போன்ற ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்து விவரங்கள் தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் மாதம் நடைபெறும்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதசுரை, கோவையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bis.gov.in என்ற இணையதழளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.bis.gov.in/wp-content/uploads/2022/04/Final-English-16-Apr-2022-2-files-merged.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...