வேலை வேண்டுமா? மத்திய நீர்வளத் துறையில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜல்சக்தி அமைச்சத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய நீர்வளத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Staff Car Driver (Ordinary Grade)

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் மெக்கானிக் பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_45103_12_0001_2223b.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Director, CGWB, Central Region, N.S.Building, Opp.Old VCA, Civil Lines, Nagpur - 440 001

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 22.08.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com