வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

NLC Recruitment of Executives in Various Disciplines
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... என்எல்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) நிரப்பப்பட உள்ள பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறவும். 

விளம்பர எண். 07/2022

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
பணி: Executive Engineer (Mechanical) - Thermal 
காலியிடங்கள்: 51

பணி: Executive Engineer (Mechanical) - Mines  
காலியிடங்கள்:  45

பணி: Executive Engineer (Electrical) - Thermal 
காலியிடங்கள்:  22

பணி: Executive Engineer (Electrical) - Mines 
காலியிடங்கள்:  23

பணி: Executive Engineer (Electrical) - Renewable Energy 
காலியிடங்கள்:  5

பணி: Executive Engineer (Civil) Thermal 
காலியிடங்கள்:  1

பணி: Executive Engineer (Civil) - Mines 
காலியிடங்கள்: 2

பணி: Executive Engineer (Civil) - Renewable Energy 
காலியிடங்கள்: 9

பணி: Manager (Scientific) - Thermal 
காலியிடங்கள்: 7

பணி: Manager (Geology) - Mines 
காலியிடங்கள்: 6

பணி: Executive Engineer (Environmental Engineering) - Mines 
காலியிடங்கள்: 5

பணி: Executive Engineer (Industrial Engineering) - Mines 
காலியிடங்கள்: 2
பணி: Executive Engineer (Chemical) - Mines 
காலியிடங்கள்: 2

பணி: Manager (HR) -  Mines 
காலியிடங்கள்: 14

பணி: Deputy Manager (HR) Mines 
காலியிடங்கள்: 20

பணி: Manager (Public Relations) Mines 
காலியிடங்கள்: 8

பணி: Manager (Legal) Mines 
காலியிடங்கள்: 6

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2022

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com