ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் உதவியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 9:48 am

தினமணி


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் உதவியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளரம்பர எண்.PL/HR/ESTB/RECT-2022 தேதி: 24.01.2022

மொத்த காலியிடங்கள்: 137

பணி: Engineering Assistant (Operations) Grade-IV
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆப்ரேசன்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000

பணி: Technical Attendant-1 Grade-I
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ 
முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.23,000 - 78,000
வயதுவரம்பு: 24.01.2022 தேதியின்படி, 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.