வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணபக் கழக நெல் கொள்முதல் மையத்தில் கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
Published on
Updated on
1 min read


கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் மையத்தில் கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.1/04864/2022

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள்: 110
சம்பளம்: மாதம் ரூ.8764 + போக்குவரத்து படி ரூ.120
தகுதி: அறிவியல், வேளாண்மையியல், பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: பருவகால உதவுபவர்
காலியிடங்கள்: 117
சம்பளம்: மாதம் ரூ.8717 + போக்குவரத்து படி ரூ.100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பருவகால காவலர்
காலியிடங்கள்: 146
சம்பளம்: மாதம் ரூ.8717 + போக்குவரத்து படி ரூ.100
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர் 34 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 13.07.2022 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com