டிரெய்னி பொறியாளர் வேலை: எங்கே..? எப்போது..? எப்படி..?
By | Published On : 04th June 2022 12:05 PM | Last Updated : 04th June 2022 12:05 PM | அ+அ அ- |

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee Engineer-I
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 01.06.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.
தகுதி: இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இதில் ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.177. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள் விண்ணப்பத்தை பதிவிற்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM(HR/Cops.&EM), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangaluru - 560 0113.
மேலும் ஏதாவது விவரங்கள் அறிய hrcompsem@bel.co.in மின்னஞ்சல் அல்லது 080-22195606 தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தெரிந்துகொள்ளவும்.