தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 79

பணி: டெக்னீசியன்
1. எலக்ட்ரானிக்ஸ் - 17
2. எலக்ட்ரிக்கல் -17
3. இன்ஸ்ட்ருமென்டேசன் - 11
4. கம்ப்யூட்டர் -11
5. பிட்டர் - 05
6. சிவில் - 04
7. வெல்டிங் - 04
8. மெஷினிஸ்ட் - 03
9. மெக்கானிக் - 01
10. டூல் டை மேக்கர் - 01
11. டீசல் மெக்கானிக் - 01
12. டர்னர் - 01
13. சீட் மெட்டல் - 01
14. கிளாஸ் பிளவர் - 01
15. ஏ.சி - 01

சம்பளம்: மாதம் ரூ.19.900 - 63,200

தகுதி: குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 03.07.2022 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nplindia.org இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. கட்டணத்தை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பெண்கள், எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi-110 012.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிநாள் : 03.07.2022

மேலும் விபரங்கள் அறிய  https://www.nplindia.org/wp-content/uploads/2022/06/Advt-3-2022-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com