வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... வங்கிகளில் 8106 குரூப் ஏ, பி அதிகாரி வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்பு

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர், வேளாண் அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உள்பட  8,106 குரூப் 'ஏ', குரூப் 'பி' அதிகாரி பணி
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... வங்கிகளில் 8106 குரூப் ஏ, பி அதிகாரி வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்பு

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர், வேளாண் அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உள்பட  8,106 குரூப் 'ஏ', குரூப் 'பி' அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வங்கி பணியாளர் தேர்வாணையம். இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8,105

பணி: குரூப் 'ஏ', குரூப் 'பி' அதிகாரி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Office Assistant - 4483
பணி: Officer Scale I - 2676
பணி: Officer Scale II General Banking Officer - 745
பணி: Officer Scale II Information Technology Officer - 57
பணி: Officer Scale II Chartered Accountant - 19
பணி: Officer Scale II Law Officer - 18
பணி: Treasury Officer Scale II - 10
பணி: Marketing Officer Scale II - 06
பணி: Agriculture Officer Scale II - 12
பணி: Officer Scale III (Senior Manager) - 80

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ, சி.ஏ,  பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.06.2022 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் மாறுபடுவதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு. நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சார்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: Officer (Scale I, II & III) மற்றும் Office Assistant (Multipurpose)  பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து,  பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com