இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலை வேண்டுமா?

போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். ADM-2(2)/AIIMS/Bhopal/Rectt.Cell/Direct/2022/01.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Registrar 
காலியிடம்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: ஏதாவதொரு ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Blood Transfusion Officer 
காலியிடம்: 01
வயதுவரம்பு: 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் எம்டி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Physicist
காலியிடம்:  01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி:  சம்மந்தப்பட்ட பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று ரேடியோலாஜிக்கல் மெடிக்கல் பிசிக்ஸ் -இல் முதுநிலைப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Accounts Officer 
காலியிடம்: 01
வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: வணிகவியில் பாடத்தில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Tutor/Clinical Instructor(Nursing)
காலியிடங்கள்: 33
வயதுவரம்பு: 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின்கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com