
பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 1040 சிறப்பு அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Specialist Cadre Officer
தகுதி: 1040
தகுதி: நிதியியல், சந்தையியல், வங்கி மேலாண்மை, வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, ஐசிடபுள்யுஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பொறியியல் பட்டத்துடன் வங்கி, நிதி சார்ந்த பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: வங்கி சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.4.2024 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஓபிசி பிரிவினர் மற்றும் அதிக பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள், ஓபிசி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.