இந்திய விமானப் படை
இந்திய விமானப் படை

விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

இந்திய விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

இந்திய விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு திட்டம்: Agniveer Vayu(Sports)Intake-2025

வயதுவரம்பு: 2.1.2004 தேதிக்கும் 2.7.2007 இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய விமானப் படை
தமிழக அரசு துறைகளில் 861 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தகுதி: கணிதம் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்ல், எலக்ட்ரிக்ல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், இன்ஸட்ருமென்டேசன் டெக்னாலஜி போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2, டிப்ளமோ படிப்பில் அனைத்து பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய விமானப் படை
ரூ. 85,000 ஆயிரம் சம்பளத்தில் பொறியாளர், சர்வேயர் வேலை!

விளையாட்டுத் தகுதி: Athletics, Lawn Tennis, Basketball, Boxing, Cycling, Cricket, Football, Gymnastics, Hockey, Kabaddi, Handball, Squash, Volleyball, Shooting, Wrestling, Water Polo, Swimming/Diving, Cycle Polo, Wushu, Weight Lifting போன்ற ஏதாவதொரு விளையாட்டுகளில் சீனியர், ஜூனியர் பிரிவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் அல்லது பல்கலைக் கழக அளிவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டுத் தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறனறியும் தேர்வு நடத்தப்படும்.

தேர்வுகள் 18.9.2024 முதல் 20.9.2024 வரை நடைபெறும். இதுகுறித்த தகவல் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.8.2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்