வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை!
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான தேசிய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NH/Rectt./05/2023-24

மொத்த காலியிடங்கள்: 118

பணி: Trainee Officer (HR)

தகுதி: மனித வள மேலாண்மை அல்லது தொழில்துறை உறவுகள் போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர, இரண்டு ஆண்டு முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Trainee Officer (Public Relations)

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர முதுகலை பட்டப்படிப்பு, கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ, ஊடகவியல் அல்லது பப்ளிக் ரிலேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trainee Officer (Law)

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் மூன்றாண்டு எல்எல்பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Senior Medical Officer (SMO)

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 30.12.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் டிசம்பர் 2023,ஜூன் 2024 கேட்,கிளாட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com