கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2025 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Executive Trainee(GET)
மொத்தா காலியிடங்கள்: 167
பாட வாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் - 84
2. எலக்ட்ரிக்கல் - 48
3. சிவில் - 25
4. கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 10
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் அல்லது அதற்கு இணையான துறைகளில் ஏதாவதொன்றில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!
வயதுவரம்பு: 1.12.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30-க்குள்ளும், ஓபிசி(என்சிஎல்) பிரிவினர் 33-க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35-க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2024 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.354, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.854 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.1.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ரைட்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



