இந்திய வனவிலங்குகள் ஆய்வு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?
இந்திய வனவிலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து...

இந்திய வனவிலங்குகள் ஆய்வு நிறுவனத்தில் வேலை - ZSI
முன்னாள் ‘பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின்’மிகவும் வளமான உயிரினங்கள் குறித்த பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கும், அது தொடர்பான, ஆய்வுகள், தேடல்கள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், 1916-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ‘இந்திய வனவிலங்கியல் ஆய்வு நிறுவனம்’ நிறுவப்பட்டது.
இந்த ஆய்வு நிறுவனத்தின் தொடக்கப்புள்ளியாக 1875-ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் விலங்கியல் பிரிவு தொடங்கப்பட்டதே. காலப்போக்கில் தனது பணியாளர் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்தும், ஆராய்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தியதன் மூலம், இந்த நிறுவனம் கடந்த கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதுடன், எதிர்காலத் தேவைகளைச் சந்திப்பதற்கான பாதையிலும் பயணித்து வருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை, இந்த நிறுவனம் தனது முதன்மை நோக்கங்களை மாற்றமின்றித் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தற்போது, இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ZSI/LTEO/2026/01
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விலங்கியல், வனவிலங்கு உயிரியல், பல்லுயிர் பெருக்கம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நெட், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.42,000
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விலங்கியல், வனவிலங்கு உயிரியல், பல்லுயிர் பெருக்கம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.zsi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாகப் பூர்த்தி செய்து, அதனுடன் பயோ-டேட்டா மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அத்துடன் விண்ணப்பப் படிவத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையொட்டி 20.11.2026 தேதிக்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பவும் மற்றும் அதன் நகலை ஒன்றை பிடிஎப் ஆக மாற்றி Iteozsi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Officer-in-Charge Zoological Survey of India, Southern Regional Centre, #130, Santhome High Road, Chennai - 600 028.
Applications are invited from interested and eligible candidates for Junior Research Fellow and SRF detailed in below
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


