ரூ.50,000-1,60,000 சம்பளத்தில் என்எல்சியில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
என்எல்சியில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து....

என்எல்சி அனல்மின் நிலையம் - கோப்புப்படம்
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் முதன்மையான ‘நவரத்னா’ பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி நிர்வாகப் பயிற்சி (கேட் - 2025) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
பொதுத்துறை நிறுவனமான என்எல்சி, சுரங்கத் தொழில் (லிக்னைட் மற்றும் நிலக்கரி), அனல் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிறுவனம் வரும் ஆண்டுகளில் உற்பத்தித் திறனைப் பெருமளவில் அதிகரிப்பதற்கான பல லட்சியத் திட்டங்களை தனது பெருநிறுவனத் திட்டத்தில் கொண்டுள்ளது. தனது திட்ட வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நெய்வேலி (தமிழ்நாடு), பார்சிங்சர் (ராஜஸ்தான்), தலாபிரா (ஒடிசா), தெற்கு பச்வாரா (ஜார்க்கண்ட்) ஆகிய இடங்களில் உள்ள தனது கிளைகள் மற்றும் அலுவலகங்களுக்குத் திறமையான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள சூரிய மின்சக்தி, காற்று மின் திட்டங்கள், கனிம ஆய்வுத் திட்டங்கள் மற்றும் துணை நிறுவனங்கள், கூட்டு முயற்சி நிறுவனங்களான தூத்துக்குடி (என்டிபிஎல்- தமிழ்நாடு) மற்றும் காதம்பூர் (என்யுபிபிஎல் - உத்தரப் பிரதேசம்) ஆகிய இடங்களுக்கும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 10/2026
பணி: Graduate Executive Trainee (GATE -2025)
மொத்த காலியிடங்கள்: 143
பிரிவுகள் வாரியான காலியிடங்கள்:
1.Mechanical - 662.
2.Electrical - 44
3.Civil-23
4.Mining - 10
தகுதி: பொறியியல் துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு பொறியியல் துறை பாடப்பிரிவுகளில் பிஇ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் - 2025 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும்.
சம்பம்: மாதம் ரூ.50,000.- 1,60,000
வயதுவரம்பு: 1.11.2026 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் - 2025 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டு பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆனால் செயலாக்கக் கட்டணங்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.800. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.12.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Thermal Power Generation and Renewable Energy. The Corporate Plan of the Company has many ambitious expansion schemes for massive capacity augmentation in the years to come.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


