ரூபாய் தாள் அச்சிடும் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
ரூபாய் தாள் அச்சிடும் பொதுத்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் ரூபாய் தாள் அச்சிடும் பொதுத் துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Process Assistant Grade-I(Non-Executive Cadre)
காலியிடங்கள்: 39
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical - 10
2. Electrical - 4
3. Electronics - 5
4. Chemical - 6
5. Pulp & Paper - 6
6. Civil - 2
7. Chemistry - 2
8. Accounts Assistant - 2
9. Office Assistant - 2
சம்பளம்: மாதம் ரூ.24,500
வயதுவரம்பு: 30.6.2024 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பல்ப் மற்றும் பேப்பர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருப்பவர்கள். பி.காம் மற்றும் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பெங்களூரு மற்றும் மைசூரில் நடைபெறும். பிற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.bnpmindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது அசல் சான்றிதழ்களுடன் இதனை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...