ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் துணை மேலாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல மின்னனு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களில் முன்னோடியாகவும்,புதுமையின் மீது உந்துதலுடன் மின்னணுவியல் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் துணை மேலாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 14

பதவி மற்றும் காலியிடங்களின் விவரங்கள்:

பதவி: TECHNICIAN(GR-II) (WG-III)

பதவி: Deputy Manager-Technical (Embedded Systems-Hardware) - 2

பதவி: Deputy Manager-Technical (Embedded Systems-Software) - 3

பதவி: Deputy Manager-Technical (Power Electronics) - 2

பதவி: Deputy Manager-Technical (Mechanical Design) - 2

பதவி: Deputy Manager-Technical (Radio Frequency Systems) - 4

பதவி: Deputy Manager-Technical (Cyber Security) - 1

தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இஇஇ,சிஎஸ்இ, மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பவர் எலக்ட்ரானிக்ஸ், ரேடார், மைக்ரோவேவ் பிரிவில் எம்இ., எம்.டெக் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐந்தாண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!
தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

சம்பளம்: மாதம் ரூ.50,000 -1,60,000

வயதுவரம்பு: 13.4.2024 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் சான்றொப்பம் செய்து, அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy General Manager, Human Resources (Recruitment Section),

Electronics Corporation of India Limited, Administrative Building, Corporate Office, ECIL (Post), Hyderabad – 500062, Telangana State.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.5.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com