பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 459 அதிகாரிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 459 அதிகாரிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்(யுபிஎஸ்சி) நடத்தப்படும் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்விற்கு தகுதியான திருமணமாகதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிக்கை எண். 11 /2024.CDS- II

1. Indian Military Academy, Dehradun - 100

2. Officers’ Training academy, Chennai 122nd SSC (Men) - 276

3. Officers Training Academy, Chennai 36th SSC Women - 19

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Indian Naval Academy, Ezhimala - 32

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Air Force Academy, Hyderabad - 32

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459
கலாக்ஷேத்ராவில் ஆசிரியர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேணடும் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 4.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும். 2.7.2001-க்கும் 1.7.2006-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிடிஎஸ் எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமை சோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுச்சேரி.

விண்ணப்பக்கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in,www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவு எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள்: 1.9.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.6.2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com