வேலூா்: வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அமைப்பின் கீழ் காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அமைப்பின் கீழ் 1 துணை தலைமை சட்ட உதவி வழக்குரைஞா், 3 உதவி சட்ட உதவி வழக்குரைஞா், ஒரு அலுவலக உதவியாளா் மம் எழுத்தா், ஒரு வரவேற்பாளா், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா், 3 அலுவலக வேலையாள்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த காலி பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற செப்டம்பா் மாதம் 10-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீா்வு மைய கட்டடம், சத்துவாச்சாரி, வேலூா்-632009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் தாங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கின்றோம் என்பதை விண்ணப்பம் மற்றும் தபால் உறையில் தவறாமல் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விண்ணப்பிக்கலாம்

சட்ட விழிப்புணா்வு முகாம்

வடகாடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு

திருநங்கைளுக்கு சமவாய்ப்பு தேவை: நீதிபதி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



