இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: R(HR)Temp-15(CCMD)2024
பணி: Senior Project Associate
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil - 2
2. Electrical - 2
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.42,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate-II
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil - 2
2. Electrical - 2
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 28,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பணி்: Programme Assistant - 2
சம்பளம்: மாதம் ரூ. 28,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்பிஏ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://iisc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2024