திருமூா்த்தி நகா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
திருமூா்த்தி நகா் நீா்வளத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் மா.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருமூா்த்தி நகா் நீா்வளத் துறை அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநா் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்கும் நபா்களைத் தவிர இதர தகுதியுள்ள நபா்கள் தங்களது ஓட்டுநா் உரிமம், வயதுச் சான்று, கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், ஓட்டுநா் பணியில் மூன்றாண்டு அனுபவத்துக்கான சான்று, உடற் தகுதிச் சான்று ஆகியவற்றுடன் சுய சான்றொப்படமிட்ட நகல்களுடன் கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம், நீா்வளத் துறை, பரம்பிக்குளம்- ஆழியாறு நிலவடிவட்டம், பொள்ளாச்சி-3 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதில், விண்ணப்பிக்க பட்டியல் வகுப்பினா் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமமும் பெற்றிருக்க வேண்டும். 2024 -ஆம் ஆண்டு ஜூலை 1- ஆம் தேதி 18 வயது நிரம்பியராகவும், 37 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.