விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1036 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
2 min read

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1036 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Post Graduate Teacher

காலியிடங்கள்: 187

தகுதி: Commerce, Hindi, Political Science, Biology, Chemistry, Maths, Economics, English, Geography, Home Science, Physics, Sociology, Physical Education போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientific Supervisor (Ergonomics and Training)

காலியிடங்கள்: 3

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teacher of Different Subject

காலியிடங்கள்: 338

தகுதி: Drawing, Painting, Fine Arts பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Law Assistant

காலியிடங்கள்: 54

தகுதி: சட்டப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Public Prosecutor

காலியிடங்கள்: 20

தகுதி: பிஎல், எல்எல்பி படிப்புடன் 5 ஆண்டு வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Physical Training Instructor(English Medium)

காலியிடங்கள்: 18

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் உடற்கல்வி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant/ Training

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Translator/Hindi

காலியிடங்கள்: 130

பணி: Senior Publicity Inspector

காலியிடங்கள்: 3

பணி: Staff & Welfare Inspector

காலியிடங்கள்: 59

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலாளர், மனிதவள மேலாண்மை, சமூக நலத்துறை, மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Librarian

காலியிடங்கள்: 10

தகுதி: நூலக அறிவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் நூலக அறிவியல் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Music Teacher(Female

காலியிடங்கள்: 2

தகுதி: இசைப் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் இசைப் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Primary Railway Teacher of Diiferent Subject

காலியிடங்கள்: 188

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சி பிரிவில் டிப்ளமோமுடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Teacher (Female) (Junior School)

காலியிடங்கள்: 2

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Laboratory Assistant, School

காலியிடங்கள்: 7

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Lab Assistant Grade II(Chemist and Metallurgist)

காலியிடங்கள்: 12

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில்

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். PGT, TGT ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் சிடெட் முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250. இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrbcheenai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.2.2025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.